தமிழகத்தில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்!கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 17.11.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இதனிடையே வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் இன்று வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பதிவாகக்கூடும். வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
No comments:
Post a Comment