எந்த எண்ணெயில் என்ன சத்து?. எவ்வளவு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?
எண்ணெய் சேர்க்காத சமையல் என்பது நடைமுறையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை எனலாம். நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன் படுத்தும் எண்ணெய்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன... ஒருவர் ஒரு நாளைக்கு அல்லது மாதமொன்றுக்கு எவ்வளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம் என்பன பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எல்லா வகை எண்ணெயிலும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இரண்டுமே அடங்கியிருக்கும். அதனால், ஒரு எண்ணெயை முழுவதும் நல்ல எண்ணெய் என்றோ, முழுவதும் கேடானது என்றோ சொல்ல முடியாது.
* மாவுச்சத்து, புரதச்சத்துபோல கொழுப்புச்சத்தும் நம் உடலுக்குத் தேவையான ஒன்றுதான். வளர்ந்த மனிதனுக்கு ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை என்றால், அதில் 25 முதல் 30 சதவிகிதம் வரை கொழுப்புச்சத்தும் இருக்க வேண்டும். இந்த 30 சதவிகிதத்துக்குள், விலங்கு கொழுப்பான நெய், வெண்ணெய், சிவப்பு மாமிசம், கொழுப்பு நீக்கப் படாத பால் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதி போன் றவை 7 சதவிகிதம் இருக்கலாம். அதற்கு மேல் இருக்கக்கூடாது என்கிறது உலக சுகாதார மையம்.
* வளர்ந்த மனிதர் (18 வயதிலிருந்து) எந்த எண்ணெய் சாப்பிட்டாலும், அல்லது இரண்டு, மூன்று எண்ணெயை காம்பினேஷனாக சாப்பிட்டா லும், எல்லாம் சேர்த்து மாதத்துக்கு அரை லிட்டர் வரை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் வெண்ணெய், நெய் எல்லாமே அடங்க வேண்டும்.
தாவர எண்ணெய்தான் நல்லது என்கிறது சமீபத்திய அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று. அந்த வகையில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில் உள்ளிட்ட தாவர எண்ணெய்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* பாமாயில் மற்றும் வனஸ்பதியை அறவே தவிர்ப்பதே நல்லது. நெய் பிரியர்கள், ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் உருக்கிய நெய் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
* கோல்டு பிரஸ்டு ஆலிவ் ஆயிலில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இது ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. ஆனால், இது சாலட் மீது ஊற்றி சாப்பிட மட்டும்தான். சமைப்பதற்கு அல்ல.
* நல்லெண்ணெயில் நல்ல கொழுப்பு அதிகம் என்பதால், வளர்ந்த மனிதர், ஒரு மாதத்துக்கு கால் லிட்டர் நல்லெண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பும், நிறைவுறா கொழுப்பு அமிலங்களும் இருக் கின்றன. இதையும் மாதத்துக்கு கால் லிட்டர் வரை எடுக்கலாம். அதே நேரம், கடலை எண்ணெயை பெரும்பாலும் பொரிப்பதற்குப் பயன்படுத்துவதால், செக்கு கடலை எண்ணெய்க்கு பதில் சுத்தி கரிக்கப்பட்ட கடலை எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், செக்கு எண்ணெய் சீக்கிரம் சூடாகி புகை வரும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சீக்கிரம் சூடேறி புகையாது. கடலை எண் ணெய் சீக்கிரம் சூடேறி புகைந்தால், அதில் இருக்கிற நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப் பாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* தவிட்டு எண்ணெயில் இருக்கிற வைட்டமின் ஈ, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குறைக்கும். சிறு வயதிலேயே வயதான தோற்றம் வராமல் தடுக்கும். மெனோபாஸின் போது உடல் சூடாகும் அறிகுறியைக் குறைக்கும். நீரிழிவு இருப்பவர்களுக்கும் தவிட்டு எண்ணெய் நல்லது. இதையும் மாதத்துக்கு கால் லிட்டர் வரைதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment