வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்
மெட்டா குழுமத்தின் அங்கமான வாட்ஸ்ஆப் செயலி, புதிய சேவைகளைச் சோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் மாற்று தன்முகப்பு படம் (ப்ரோஃபைல் போட்டோ) வைத்துக் கொள்ள புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களின் தொடர்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு தன்முகப்பு படமும், இல்லாதவர்களுக்கு மாற்று தன்முகப்பு படத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் ஓர் அரணாக இந்த வசதி பார்க்கப்படும் என வாட்ஸ்ஆப் பீட்டாஇன்ஃபோ என்கிற இணையதளம் தெரிவிக்கிறது.
மேலும், வாட்ஸ்ஆப்பில் பயனர் பெயர் அமைத்துக் கொள்ளும் வசதியும் சோதனை முயற்சியில் உள்ளது.
தற்போது மொபைல் எண் மட்டுமே வாட்ஸ் அப்பில் ஒருவரை மற்றொருவர் தொடர்பு கொள்ள கருவியாகவுள்ள நிலையில், பயனர் பெயர் வசதி மூலமாக பெயரைத் தேடி தொடர்பு கொள்ள இயலும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment