திருக்கார்த்திகை 2023:தீபம் ஏற்றுவதற்கான நல்ல நேரம்
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும்.
நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.
No comments:
Post a Comment