தீபாவளி 2023:எந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும், லட்சுமி பூஜை செய்ய வேண்டும்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, November 11, 2023

தீபாவளி 2023:எந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும், லட்சுமி பூஜை செய்ய வேண்டும்?

 தீபாவளி 2023:எந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும், லட்சுமி பூஜை செய்ய வேண்டும்?


தீபாவளி பண்டிகை 2023 நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது நமக்கு தெரியும். இந்த நன்னாளில் எந்த நேரத்தில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும், லட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.


இந்தாண்டு நவம்பர் 12ம் தேதி தமிழ் வருடம் சோபகிருது வருடத்தில் ஐப்பசி மாதம் 26ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முக்கியமான செயல்பாடுகள் என்றால் கங்கா ஸ்நானம் செய்வதும், லட்சுமி பூஜை, புத்தாடைகளுக்குப் பூஜை செய்து அவசியம்


கங்கா ஸ்நானம் நேரம் :

தீபாவளி தினத்தில் குரு ஹோரையான அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.


தீபாவளி லட்சுமி, புத்தாடை பூஜை:

இந்த அற்புத தினத்தில் மகாலட்சுமி குபேர பூஜை, புத்தாடை பூஜை செய்ய சரியான நேரம் காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுக்கிர ஹோரையில் பூஜை செய்ய வேண்டும்.


அதன் பின்னர் புத்தாடை உடுத்தவும். மாலை 6 மணிக்கு மீண்டும் லட்சுமி குபேர பூஜை செயது நல்லது.


கேதார கெளரி விரத பூஜை:

தீபாவளிக்கு மறுநாள் ஐப்பசி மாதம் 27ம் தேதி 13 நவம்பர் 2023 திங்கட் கிழமை அமாவாசை தினத்தில் மதியம் 1 மணி முதல் 4 மணிக்குள் கேதார கெளரி விரத பூஜை செய்ய உத்தமம் நேரம் ஆகும்.

No comments:

Post a Comment