குளிர்ந்த நீரை குடிக்கலாமா?
மனித உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
எல்லா வீடுகளிலும் குளிர்சாதனப் பெட்டி இருப்பதால், குளிர்ந்த நீரை பருகினால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கம் இருக்க்றது. குளிர்ந்த நீர் உடலில் சேரும் போது, ஆரோக்கியத்தில் பல மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
முதலில் தலை பகுதியில் இருக்கும் நரம்புகளை பாதிக்கும். இதனால் தான், குளிர்ந்த நீரை பருகியவுடன் தலைவலி ஏற்படுகிறது. மேலும், கழுத்து நரம்புகள் பாதிப்பதால், இதயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து குளிர்ந்த நீர் குடிப்பதால் உடல் வெப்ப சமன்பாடு சீர்குலையும். ஜலதோஷம், தொண்டையில் புண் வரும் அபாயம் உள்ளது. குளிர்ந்த நீர் வயிற்றை இறுக்கமடையச் செய்யும். இதனால் செரிமானப் பிரச்னை ஏற்படும்; மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலில் சேரும் கொழுப்புகள் கரைவது கடினமாகிறது; உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்பினால் குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment