வெற்றிலையின் சிறப்புகள் மற்றும் பயன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 8, 2023

வெற்றிலையின் சிறப்புகள் மற்றும் பயன்கள்

 வெற்றிலையின் சிறப்புகள் மற்றும் பயன்கள்


வெற்றிலை என்பது மங்களகரமான ஒரு மூலிகை. இது மிளகு இனத்தைச் சேர்ந்த இலை. இதில் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்று இருக்கிறது. நமக்குத் தெரியாத வெற்றிலையின் பயன்கள் நிறைய இருக்கின்றன. அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு தரக்கூடிய வரப்பிரசாதமாக வெற்றிலை விளங்குகிறது. வெற்றிலையில் உள்ள காம்பை நாம் நீக்கிவிட வேண்டும். கபம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வெற்றிலை மூலம் தீர்வு காண முடியும். வெற்றிலைச் சாறோடு தேன் சேர்த்து குழந்தைகளுக்கு நாம் கொடுக்கலாம்.


இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அனைத்து வயதினரும் வெற்றிலையை எடுத்துக்கொள்ளலாம். தொண்டைப்புண் மற்றும் இருதய நோய் இருப்பவர்கள் வெற்றிலை சாப்பிட வேண்டாம். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய வெற்றிலையைப் பயன்படுத்தலாம். வீக்கம் இருப்பவர்கள் வெற்றிலையோடு ஓமம் மற்றும் சீரகம் சேர்த்து கசாயமாகப் பருகலாம். வயதானவர்களை கொரோனா அதிகம் தாக்காமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவது தான்.


உணவு உண்ட பிறகு வெற்றிலை, கிராம்பு, பட்டை, ஓமம், சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் வயிற்றில் உள்ள வாயு பிரச்சனை சரியாகும். வெற்றிலை மூலம் முட்டி வலி உள்ளிட்ட கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இப்போது வெற்றிலை சேர்த்த லேகியங்களும் கிடைக்கின்றன. மார்புச் சளியை நீக்கும் சக்தி வெற்றிலைக்கு இருக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் குறையும். அந்தக் காலங்களில் வீட்டின் பின்னால் அனைத்து வகையான மூலிகைகளையும் வளர்ப்பார்கள். 


இன்று அனைத்தையும் கடையில் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். வெற்றிலையை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக் கூடாது. அதனால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டுவிட்டால் நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும், அல்லது கொத்தமல்லி ஜூஸ் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் வெற்றிலை என்பது நிஜமாகவே நமக்கு ஒரு வரப்பிரசாதம் தான். கபம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வெற்றிலை மூலம் நாம் எளிதில் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment