இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம் என்ன? கமல்ஹாசன் கூறும் அறிவுரை!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘சமீப காலமாக இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. 30 - 40 வயதுகளில் இப்பிரச்னை வருவது வியப்பாக இருக்கிறது.
இதுகுறித்து என் மருத்துவ நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் இதற்கு மூன்று காரணங்களைக் கூறினர். உறக்கமின்மை, உணவுப் பழக்கம், செயலாற்றாமல் இருப்பது. இந்த 3 காரணங்களாலே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.
தூக்கத்திற்கும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. உணவே மருந்தாக இருக்க வேண்டும். மருந்து உணவாக இருக்கக் கூடாது. உடல் செயல்பாட்டுகளை நாம் செய்வதில்லை.
அசையாமல் உருளைக்கிழங்குகளைப்போல் இருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் விளையாடுவதிலும் இருக்க வேண்டும்.
ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. இளைஞர்கள் இதை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.” என அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment