மணமணக்கும் கல்யாண வீட்டு வத்தக் குழம்பு செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Monday, October 2, 2023

மணமணக்கும் கல்யாண வீட்டு வத்தக் குழம்பு செய்வது எப்படி?

 மணமணக்கும்  கல்யாண வீட்டு வத்தக் குழம்பு செய்வது எப்படி?


வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்


நல்லெண்ணெய் – 50ml


சுண்டைக்காய் வத்தல் – ¼ கப் 


வெள்ளைப் பூண்டு – 50g (தோல் உரித்த்து)


சின்ன வெங்காயம் – 100 g


தக்காளி – 2


புளி – நெல்லிக்காய் அளவு


கருவேப்பிலை – ஒரு கொத்து 


கடுகு – ½ தேக்கரண்டி


சீரகம் – ½ தேக்கரண்டி


மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி


மல்லித்தூள் – 2 தேக்கரண்டி


சீரகத்தூள் – ½ தேக்கரண்டி


வெந்தயம் – ¼ தேக்கரண்டி


மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி


உப்பு – தேவையான அளவு


வெல்லம் – சிறிதளவு


செய்முறை:


சுண்டக்காய் வத்தலை வெதுவெதுப்பான தண்ணீரில் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.


  ஒரு Pan இல் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும்,வெந்தயம், கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின் அதில் தோல் உரித்த வெள்ளைப் பூண்டை சேர்த்து, பூண்டு நன்றாக வதங்கிய பின் சின்னவெங்காயத்தை சேர்த்து சாஃப்டாக வதக்கிக் கொள்ள வேண்டும்.


தக்காளியை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக்கொண்டு, அதனை வெங்காயம் மற்றும் பூண்டு வதக்கிய கலவையில் சேர்த்து வதக்கி விட வேண்டும்.


 தக்காளியின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு பின் சிறிது உப்பு, சீரகத்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 ஓரளவு வதங்கிய பின் புளி தண்ணீர் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொண்டு மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.


பின்னர் ஊற வைத்து எடுத்துள்ள சுண்டைக் காய்களை நீர் வடித்து விட்டு குழம்பில் சேர்த்துக் மீண்டும் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கொதிக்க விட வேண்டும்.


 அவ்வப்போது கிளறி கொண்டே இருக்க வேண்டும்.


குழம்பு நன்கு கொதித்து கெட்டியான பின் சிறிது வெல்லம் சேர்த்து தீயை குறைவாக வைத்து 2 நிமிடங்கள் வைக்கவும்.


இப்போது மணமணக்கும் கல்யாண  வீட்டு வத்தக்குழம்பு ரெடி!

No comments:

Post a Comment