மாணவர்களின் கல்வி திறன் குறித்து அரசு ஆய்வு
முதலாவது மாநில கல்வி சாதனை கணக்கெடுப்பு நாடு முழுதும், நவ., 3ம் தேதி நடக்க உள்ளது. இதில், 1.11 கோடி மாணவர்களின் திறன்கள் சோதிக்கப்பட உள்ளன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி சாதனை கணக்கெடுப்பு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக, 2021ல் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மாணவர்கள் கல்வி கற்கும் திறன், கற்பிக்கப்படும் முறை உள்ளிட்டவை தொடர்பாக, மாவட்ட அளவில் இந்த கணக்கெடுப்பு, 3, 6, 8, 9ம் வகுப்பு மாணவர்களிடம் நடத்தப்படும்.அதற்கு முன்னோட்டமாக, தற்போது முதலாவது மாநில கல்வி சாதனை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின், 'பராக்' எனப்படும், திறன் ஆய்வு அமைப்பு சார்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
நாடு முழுதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நவ., 3ம் தேதி, 3, 6,8, 9ம் வகுப்பு படிக்கும், 1.11 கோடி மாணவர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment