பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்ட இரு நாட்களில் அத்துறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கியுள்ளார். அதன் ஒரு கட்டமாக 9 இணை இயக்குநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 துணை இயக்குநர்களுக்கு தற்காலிகமாக இணை இயக்கநர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக(இடைநிலைக்கல்வி) உள்ள சசிகலா, பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநராகவும், அரசு தேர்வுகள் இயக்கக மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் செல்வராஜ், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் அமுதவல்லி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செல்வக்குமார், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநர் பொன்னையா, உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் வை.குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணை இயக்குநராகவும், தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் ஆனந்தி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும்(பாடத்திட்டம்), பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின்(தொழிற்கல்வி) இணை இயக்குநர் ஜெயக்குமார், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின்(உதவி பெறும் பள்ளிகள்) இணை இயக்குநர் சாந்தி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் அய்யண்ணன், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநர் ஞானகவுரி, அதே பணியில் இணை இயக்குநராகவும்(நிர்வாகம்), பள்ளிக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர் ஆர்.பூபதி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின்(இடைநிலைக் கல்வி)இணை இயக்குநராகவும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநர்(சட்டம்) சுவாமிநாதன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் முனுசாமி, அதே பிரிவில் இணை இயக்குநராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராகவும்(தொழிற்கல்வி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment