தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, October 25, 2023

தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

 தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் அனுப்பி நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்


ராமநாதபுரம் பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி அரசு பள்ளியில் பணியாற்றி வரும் வேதியியல் துறை ஆசிரியர் குடியரசன் 41. இவர் ஆக., 15 அன்று 'பரிக் பே சர்ச்சா' இயக்கத்தில் மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சி பற்றிய கருத்துக்களை, 'மை கவர்மெண்ட், வெப்சைட்' வழியாக தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து சுதந்திர தினத்தின் அமிர்த காலத்தில் அடுத்து வரும் 25 ஆண்டு காலத்தில், 'ஒவ்வொருவரின் கருத்துக்களை கையில் எடுப்போம்', என்ற அடிப்படையில் இந்த வெப்சைட் செயல்பட்டது. இதில் ஆசிரியர் 12 கருத்துக்களை மாணவர்களின் நலனுக்காக அனுப்பி வைத்திருந்தார்.


இதற்கு பாராட்டும் தெரிவிக்கும் வழக்கில் பிரதமர் மோடி கையெழுத்திட்ட கடிதம் அனுப்பி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஆசிரியர் குடியரசன் கூறியபோது: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, "மாணவர்களுக்கு வீடும், பள்ளியும் ஒன்றுதான் என்ற மனநிலை கொண்டிருக்க வேண்டும்.


தேர்வு என்பது நமது திறமையை வெளிப்படுத்தும் இடமாகத் தான் கொள்ள வேண்டும். பிறர் முன்னிலையில் நம்மை மதிப்பிடுவது அல்ல. வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே மாறி, மாறி வருவது தான் வாழ்க்கை, என்ற எண்ணத்தை கொள்ள வேண்டும், என 12 கருத்துக்களை தெரிவித்து இருந்தேன். இதற்காக பிரதமரிடமிருந்து கடிதம் பெற்றது மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment