அரிசியைக் கழுவும்போது இதை மட்டும் செய்துவிட வேண்டாம்! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 24, 2023

அரிசியைக் கழுவும்போது இதை மட்டும் செய்துவிட வேண்டாம்!

அரிசியைக் கழுவும்போது இதை மட்டும் செய்துவிட வேண்டாம்!
பொதுவாக நாள்தோறும் உணவு சமைக்கும் போதெல்லாம் அனைவர் வீட்டிலும் செய்யும் ஒன்று அரிசியைக் கழுவி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைப்பது. பிறகு, குக்கரில் போட்டு சரியான அளவில் தண்ணீர் விட்டு விசில் வைத்து வேகவிட்டு சாப்பிடுவதோ அல்லது பாத்திரத்தில் வேகவைத்து கஞ்சி நீரை வடிகட்டி சாப்பிடுவதோ அது அவரவர் வசதி. இது என்ன பெரிய விஷயமா? விஷயம் இருக்கிறது. நிறைய இருக்கிறது.

 அதாவது, அரிசியை கழுவும்போது பல பெண்கள், கையில் கிடைத்த அரிசியை நன்கு பிணைந்து கழுவுவார்கள். ஆனால், அந்த அளவுக்கெல்லாம் அரிசியில் எந்த அழுக்கும் படிந்துவிடவில்லை. அது ஏற்கனவே பல இயந்திரங்களுக்குள் சிக்கி குற்றுயிரும், குலை உயிருமாகத்தான் நம் கையில் வந்திருக்கிறது. அதனை, தண்ணீரை ஊற்றிக் கழுவுகிறேன் என்ற பெயரில், பிணைந்து, இருக்கும் சக்கையைக் கூட தண்ணீரில் கரைத்துவிடாமல், அரிசியை ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று முறை அளவாக தண்ணீர் விட்டு, விரல்களைக் கொண்டு காற்றில் அசையும் இலைகளைப் போல, அரிசியை அப்படியும் இப்படியுமாக ஒரு சில முறை அசைத்துவிட்டு நீரை மெதுவாக வெளியேற்றுங்கள். 

 சமைத்து சாப்பிடும் உணவை விடவும், சமைக்கும் போதும், சமைத்தப் பிறகும் வீணாகும் உணவின் அளவு தற்போது அதிகமாக இருக்கிறது. எனவே, அரிசியைக் கழுவி தண்ணீரை வெளியேற்றும்போது ஓரிரு அரிசி வெளியே சென்றால் என்னவென்று நினைக்காமல், 

அது பல காலப் பயணத்தை முடிந்து உங்களை வந்தடைந்திருப்பது, இப்படி லேசான சிங்க்கில் இருக்கும் துளைக்குள் சென்று மடிய அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிறிது நேரம் ஊறவைத்து பிறகு பாத்திரத்தில் இடுங்கள். இனியும் அரிசியை பிணைந்து கழுவ வேண்டாம்.

No comments:

Post a Comment