முகம் பளபளப்பாகவும்,உடல் அழகும் பெற உதவும் குப்பைமேனியின் மருத்துவ பயன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 17, 2023

முகம் பளபளப்பாகவும்,உடல் அழகும் பெற உதவும் குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்

முகம் பளபளப்பாகவும்,உடல் அழகும் பெற உதவும் குப்பைமேனியின் மருத்துவ பயன்கள்
நாடாபுழுக்களை குடலிலிருந்து வெளியேற்ற ஒருபிடி குப்பைமேனி வேரை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, ஒரு லிட்டர் நீரிலிட்டு 200 மில்லி லிட்டராக அதைச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க பூச்சிகள் நாடாபுழுக்கள் எல்லாம் வெளியேறும்.

 சில பிள்ளைகளுக்கு இந்த தண்ணீரைக் குடிப்பதால் பேதியாகும் வாய்ப்பும் இருக்கிறது. அதுபோன்ற நிலையில் தயிர் சாதம் கொடுக்கலாம். இந்த அளவில் கால் பங்கு மட்டுமே கொடுத்தால் பேதியாகாது. ஆனால் நாடாபுழுக்கள் வெளியேறும். குப்பைமேனி இலைச்சாற்றினை 8 துளிகள் அளவு தடவினால், தொண்டைப்பகுதியிலுள்ள கோழை நன்றாக வெளிப்படும். அல்லது குப்பைமேனி இலையை காய வைத்துத் தூள் செய்து கால் தேக்கரண்டி அளவு உட்கொண்டு வர கோழையானது நன்றாக வெளிப்படும்.

 குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லேசாக நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கால் டம்ளர் கஷாயமாக்கி வடிகட்டிக் குடிக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமல் நன்கு கட்டுப்படும். 

 குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைச் சம அளவாக எடுத்துக் கொண்டு ஓர் இரும்புச் சட்டியில் விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 

 விளையாடிவிட்டு வந்து மூட்டுவலி என்று பையன் கூறும் சமயங்களில், இதனை நன்றாகத் தேய்த்துவிட வலியானது விரைவில் குணமாகிவிடும்.

 குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி வர, பெண்களின் முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டு வர, தேக அழகும் ஆரோக்கியமும் ஏற்படும். 

 குப்பைமேனியினுடைய முழுத்தாவரமும் கசப்பு மற்றும் காரமான சுவையுடையவை வெப்பத்தன்மையும் கொண்டது. மார்புச்சளி, கபநோய்கள், மூச்சிறைப்பு, இருமல், கீல்வாதம் முதலியவற்றைப் போக்கும். இலை, வேர் ஆகியவை வாந்தி மற்றும் பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.

 இலை, தளிர்களை நீரில் கொதிக்க வைத்துக் குடிப்பதால் குடல் புழுக்கள் அழிவதோடு உடல் பருமன் மற்றும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.

No comments:

Post a Comment