சப்பாத்தி,பூரிக்கு மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 10, 2023

சப்பாத்தி,பூரிக்கு மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

சப்பாத்தி,பூரிக்கு மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?
பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான‌ பொருட்கள்

 பன்னீர் ஒரு பாக்கெட் 

 பெரிய வெங்காயம் 2

 தக்காளி 2 

 பிரிஞ்சி இலை பாதி

 பட்டை சிறு துண்டு

 ஏலக்காய் 1

 இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி

 மஞ்சள் தூள்:கால் தேக்கரண்டி 

 தனி மிளகாய் தூள் :ஒரு தேக்கரண்டி

 சீரகத் தூள்: அரை தேக்கரண்டி 

 கரம் மசாலா தூள் :கால் தேக்கரண்டி 

 கலர் பொடி சிட்டிகை 

 வெண்ணெய் :கால் கப்

 எண்ணெய் :தேவையான‌ அளவு

 உப்பு :ஒரு தேக்கரண்டி 

 கொத்தமல்லி தழை: ஒரு கொத்து

 பன்னீர் பட்டர் மசாலா செய்முறை

 வெங்காயம், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

 நறுக்கிவற்றை தனித்தனியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும். 

வதக்கியவற்றை ஆற வைத்து தனித்தனியாக அரைத்து எடுக்கவும்..

  பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை மட்டும் போட்டு பொரித்து எடுக்கவும்.

 அதிகம் கருகி விடாமல் குறைந்த தீயில் வைத்து பொரிக்கவும். 

 நாண்ஸ்டிக் கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும், பட்டை இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். 

அதில் அரைத்த வெங்காய விழுதையும் சேர்த்து வதக்கவும் .

வெங்காய விழுது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். 

அதில் தக்காளி விழுதை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து தூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறி விடவும். 

 தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து பொரித்த பன்னீரை சேர்த்து கிளறவும்.

 மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 

சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி !!!.

No comments:

Post a Comment