2.மீந்துபோன கீரை கடைசலை சப்பாத்தி மாவில் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால், மிருதுவான, ருசியான சப்பாத்தி ரெடி.தொட்டுக்கொள்ள சிறிது வெண்ணெய் போதும்.
3.வெண்ணெய் அல்லது எண்ணெயை தொட்டுக் கொண்டு பூரி திரட்டினால், பொரிக்கும் எண்ணெயில் கசடு வராது.
4. உறை ஊற்றும் மட்பாண்டத்தை தினமும் சுடுநீரில் கழுவி வெயிலில் காய வைத்தால் பூஞ்சை வராது.
5. அரிசிக் குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழியவும்.
இந்த டூ இன் ஒன் உப்புமா வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும்.
6.இட்லிப்பொடி அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடும் பொடியில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது பொட்டுக் கடலையை இடித்து அதில் கலந்துவிட்டால் காரம் சரியாகிவிடும்.
7.கேரட்டை தோல் சீவி, ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து நெய்யில் வதக்கி அல்வா செய்தால் சூப்பராக இருக்கும்.
8.சாம்பாருக்கு அரைத்த பருப்பில் இரண்டு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் தேங்காயை மைபோல் அரைத்துச் சேர்த்து ரசம் வைத்தால் சூப்பராக இருக்கும்.
9.பீன்ஸ் வாடிவிட்டால், ஐஸ் வாட்டரில் சில நிமிடங்கள் போட்டுவைத்து, பிறகு எடுத்து சமைத்தால் புதியது போலவே இருக்கும்.
10.கோதுமை மாவுடன் சிறிது சாதம் வடித்த கஞ்சியைச் சேர்த்துப் பிசைந்து பூரி செய்தால் நீண்ட நேரம் மொறுமொறுப்பாக இருக்கும். ஆறிய பிறகும் கூட பூரி சாஃப்டாகவே இருக்கும்.
11.குழம்பில் புளி அதிகமாகிவிட்டால், சூடாக இருக்கும்போதே சிறிது வெல்லம் சேர்க்கவும். புளிப்பு உடனே சரியாகிவிடும்.
12. பருப்பு ஊறவைக்க நேரமில்லாவிட்டால், சோயா உருண்டைகளை வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் ஊறவைத்து, பிழிந்து அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுசுற்றி இந்தக் கலவையில் பீன்ஸ் உசிலிக்குப் பயன்படுத்தலாம். சூப்பராக இருக்கும்.
13.தேநீரில் ஒரு கப்புக்கு ஒரு கிராம்பு வீதம் இடித்துச் சேர்ப்பதால் சுவையும், சத்தும் கூடும்.
14.தேங்காய் இல்லாவிட்டால் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து, பொரியலை இறக்கும் சமயத்தில் தூவி இறக்கினால் மணமும், சுவையும் கொண்ட பொரியல் ரெடி.
15.பாதுஷா செய்யும் மாவில் சிறிது தயிர்விட்டுப் பிசைந்து பாதுஷா செய்தால் மிகவும் மென்மையாக இருக்கும்.
16.அரிசி பாயசம் செய்யும்போது 1 கப் அரிசியில் 1 லிட்டர் ஃபுல் க்ரீம் மில்க் பயன்படுத்தவும். உடன் முந்திரி, பாதாம் பவுடரும் சேர்க்கவும். சீனிக்குப் பதில் வெல்லம் சேர்க்கவும். பாயசம் மிகவும் ருசியாக இருக்கும்.
17.பாஜரே பரோட்டா தயாரிக்க கோதுமை மாவில் 2 கரண்டி துருவிய கேரட், கொத்துமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். பரோட்டா சத்துள்ளதாகவும் ருசியாகவும் இருக்கும்.
18. பூரி உப்பலாக வர 2 கப் கோதுமைமாவில் கால் கிண்ணம் பெரிய ரவாவை சேர்க்கலாம்.
19.மோர்க்குழம்பிற்காக கடலைமாவு வேக வைக்கும்போது சிறிது பச்சை பெருங்காயம் மற்றும் ஒரு தேக்கரண்டி கார்ன் ஃப்ளவர் மாவு கரைத்த நீரையும் சேர்த்து கலந்து, பிறகு அதில் பெருங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் பவுடர் சேர்த்து தாளித்து பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.
20.காரக்குழம்பு, வற்றல்குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பை வறுத்து, பொடிசெய்து போட்டால் குழம்பு திக்காகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
21.முறுக்கிற்கு மாவு பிசையும்போது இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக்கொண்டால் முறுக்கு நெய்மணத்துடன் சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment