புரட்டாசி 2023: புரட்டாசி மாத சிறப்புகள்,ஆன்மீக விசேஷங்கள்,இறை வழிபாட்டு முறை மற்றும் கிடைக்கும் பலன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 16, 2023

புரட்டாசி 2023: புரட்டாசி மாத சிறப்புகள்,ஆன்மீக விசேஷங்கள்,இறை வழிபாட்டு முறை மற்றும் கிடைக்கும் பலன்கள்

புரட்டாசி 2023: புரட்டாசி மாத சிறப்புகள்,ஆன்மீக விசேஷங்கள்,இறை வழிபாட்டு முறை மற்றும் கிடைக்கும் பலன்கள்
வருடத்தில் புரட்டாசி மற்றும் மார்கழி ஆகிய மாதங்கள் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதங்களாக கருதப்படுகின்றன. 

புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும். புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு படைத்து வழிபடும் முறையும் நம்முடைய வழக்கத்தில் உள்ளது.

 புரட்டாசி மாத விரதம், ஏகாதசி விரதத்திற்கு இணையாக சொல்லப்படும் விரத முறையாகும். 

 புரட்டாசி மாத சிறப்புகள் : தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வருவது புரட்டாசி மாதமாகும்.

 சூரியன், கன்னி ராசியில் பயணிக்கும் காலமாகும். இது மகாவிஷ்ணுவிற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வைணவர்கள் உள்ளிட்ட பலரும் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவது வழக்கம்.

 புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரக் கூடியதாகும். 

நவகிரகங்களில் புத்தி காரகனான புதன் பகவானுக்குரிய மாதமாகவும் புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகவும் கருதப்படுகிறது. 

முன்னோர் வழிபாட்டிற்குரிய மகாளய பட்சம் துவங்குவது இந்த மாதத்தில் தான்.

 பட்சம் என்பது 15 நாட்கள் கொண்டதாகும். நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்று கூடி 15 நாட்கள் நம்முடன் தங்கக் கூடிய காலமே மகாளய பட்ச காலமாகும்.

 மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாத பெளர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை வரக்கூடிய காலமாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்கிறோம். 

 புரட்டாசி வழிபாடு : 

 அதே போல் அம்பிகை வழிபாட்டிற்கு உரிய நவராத்திரி வழிபாடும் வரக் கூடியது இந்த புரட்டாசி மாதத்தில் தான். புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பூர்வபட்ச பிரதமை திதியில் துவங்கி நவமி திதி வரையிலான ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

 சிவனுக்குரிய கேதார கெளரி விரதமும் இந்த மாதத்தில் தான் வரும். இப்படி தெய்வங்களின் அருளை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற மாதமாக விளங்குவதால் புரட்டாசி மாதம் புண்ணியம் தரும் மாதமாக கருதப்படுகிறது. 

 புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் பெருமாளின் அருள் மட்டுமின்றி குல தெய்வ அருளும் கிடைக்கும். சனி தோஷம் விலகும். 

புரட்டாசி மாதம் காற்றும், வெயிலும் குறைந்து மழை துவங்கும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் பல விதமான நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என்பதால் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு இந்த மாதத்தில் அசைவம் சாப்பிட்டால் அது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் என்பதால் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்க்க வேண்டும்.

 இந்த ஆண்டு புரட்டாசி மாதத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் புரட்டாசி மாதத்தின் துவக்க நாளிலேயே விநாயகர் சதுர்த்தி திருநாளும் வருகிறது. வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருவதால் மாதத்தின் முதல் நாளே வழிபாட்டிற்குரிய விரத நாளாக அமைகிறது

No comments:

Post a Comment