இன்று (06.09.2023) கிருஷ்ண ஜெயந்தி:பூஜை செய்ய நல்ல நேரம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 6, 2023

இன்று (06.09.2023) கிருஷ்ண ஜெயந்தி:பூஜை செய்ய நல்ல நேரம்

இன்று (06.09.2023) கிருஷ்ண ஜெயந்தி:பூஜை செய்ய நல்ல நேரம்
பூஜை செய்ய நல்ல நேரம்

 இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது. 

 கிருஷ்ண ஜெயந்தி விழாவை இரவு நேரத்தில் கொண்டாடுவதுதான் சிறப்பு. கிருஷ்ணர் இரவில்தான் பிறந்தார் என்பதால் மாலையில் பூஜை செய்வதுதான் சிறப்பு. 

 கிருஷ்ண ஜெயந்தி 2023

 இந்த ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6, புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. 

 இந்து நாட்காட்டியின்படி, ஆவணி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் அஷ்டமி திதி செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 3.37 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு முடிவடையும். 

 ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 09.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது. 

 பூஜை செய்ய நல்ல நேரம்

 ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட உகந்த நேரம் செப்டம்பர் 6 ஆம் தேதி இரவு 11:57 மணிக்கு தொடங்குகிறது.

 கிருஷ்ணரை வழிபட பூஜை செய்வதற்கு மாலை 4.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை உள்ளது.

 கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதமிருந்து வழிபடுவது கிருஷ்ணரின் அருளைப் பெறலாம். 

 புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பூஜை செய்து கண்ணனை வணங்கினால் உங்கள் வீட்டிலும் தனது பிஞ்சு பாதத்தில் கோலம் போட கண்ணன் பிறப்பான்.

 கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த முறுக்கு, சீடை, அதிரசம், வெண்ணெய் உள்ளிட்ட பலகாரங்களைப் படைத்து நம்பிக்கையுடன் பூஜை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment