எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் முகப்பருக்களை எவ்வாறு நீக்கலாம்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 19, 2023

எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் முகப்பருக்களை எவ்வாறு நீக்கலாம்?

எளிமையான வீட்டு வைத்தியம் மூலம் முகப்பருக்களை எவ்வாறு நீக்கலாம்?
முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் உண்டு.. பொடுகுத்தொல்லை,உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம்.

  எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது?

 திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும்.


 திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

 குங்குமாதி லேபத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.

 பசுஞ்சாணத்தில் செய்யப்பட்ட விபூதியை தண்ணீரில் குழைத்துத் தேய்த்துவந்தாலும் பருக்கள் மறையும். 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். 

இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும். அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் இது நீங்கும். வெங்காரத்தைப் பொரித்தால் (போரக்ஸ்) அது மாவாகக் கரையும். 

அதைத் தண்ணீருடன் கலந்து பரு பழுத்திருக்கும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும். 

 வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். 

அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் இருந்தாலும் முகப்பரு ஏற்படும். 

வெட்பாலை தைலத்தைப் பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்குவதோடு, முகப்பருவும் மறையும். 

 பொடுகால் ஏற்படும் முகப்பருவுக்குப் பொடுதலை இலைச்சாற்றைத் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு நீங்குவதோடு, முகப்பருக்கள் சீக்கிரம் மறையும். 

 எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும்.

 சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் எலுமிச்சைச் சாறு நீக்கும். இந்த முறைகளைப் பின்பற்றினால் முகப்பருக்கள் நீங்கிப் பொலிவுடன் வலம் வரலாம்.

No comments:

Post a Comment