சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 3, 2023

சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!

சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!
உடலில் இன்சுலின் சுரப்பது குறைந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், தோலில் அரிப்பு, பாதம் மறத்துப்போதல், அதிக தாகம், எப்போதும் பசியோடு இருப்பது உள்ளிட்டவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும். 

ரத்த கொதிப்பு, பக்கவாதம், கொழுப்பு சத்து அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு காரணங்களாகும்.

 இந்திய மக்கள்தொகையில் சுமார் 11.4 சதவீதம் அதாவது, 10.1 கோடி பேர் சர்க்கரை நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். 15.3 சதவீதம் பேர், சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்புடன் வாழ்கின்றனர். எந்தவொரு உணவு கட்டுப்பாடாக இருந்தாலும், சர்க்கரை அளவை குறைப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். முதலில் 30 நாட்கள் சர்க்கரை இல்லாத சவாலை கடைப்பிடியுங்கள். பின்னர் அதனை சீர்ப்படுத்தி கொள்ளலாம்.

 சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். 

 1. எடை குறையும் : 

 நீங்கள் சர்க்கரை எடுத்து கொள்வதை நிறுத்துவதால், தினமும் எடுத்து கொள்ளும் உணவு கலோரியின் அளவு கடுமையாக குறையும். இதனால் உடல் பருமனால் அவதிப்படுவோர், சர்க்கரையை தவிர்த்தால், விரைவாக எடையை குறைக்கலாம். 

 2. வாய் சுகாதாரம் : 

 பொதுவாக வாய்வழி சுகாதாரம் பாதிக்கப்படுவதற்கு சர்க்கரை முக்கிய காரணமாக விளங்குகிறது. சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால், பற்கள் ஆரோக்கியமுடனும், ஈறுகள் வலுவாகவும் மாறும்.

 3. ஆற்றல் அதிகரிக்கும் : 

 சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்தும் போது, உடலில் ஆற்றலின் அளவு அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

 4. இதய ஆரோக்கியம் : 

 அதிக சர்க்கரை உணவுகளும், இதய பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

 5. கல்லீரல் ஆரோக்கியம் : 

 அதிக சர்க்கரை உணவுகளை எடுத்து கொள்ளும் போது கல்லீரல் பாதிப்புக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. சர்க்கரையை நிறுத்தும் போது, கல்லீரல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

 6. சரும ஆரோக்கியம் : 

 ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆரோக்கியமான அளவில் இருக்கும் போது, சரும ஆரோக்கியம் மேம்படும். வயதான தோற்றம் தாமதாகும்.

No comments:

Post a Comment