2 tbsp எண்ணெய்
1 tbsp உளுந்த பருப்பு
1 tbsp கடலை பருப்பு
2 tbsp மல்லி
¼ tbsp வெந்தயம்
1 சில் தேங்காய்
சாம்பாருக்கு
1 tbsp எண்ணெய்
4 piece முருங்கைகாய்
4 piece மஞ்சள் பூசணிக்காய்
4 piece கத்தரிக்காய்
½ கப் புளி கரைத்த தண்ணீர்
100 கிராம் துவரம் பருப்பு
உப்பு தேவையான அளவு
தாளிக்க
1 tbsp கடுகு
½ tbsp வெந்தயம்
1 பச்சை மிளகாய்
2 சிவப்பு மிளகாய்
கருவேப்பிலை சிறிது
கொத்த மல்லி சிறிது
செய்முறை
முதலில் சாம்பார் வைப்பதற்கு தனித்தன்மையான மசலாவை தயார் செய்ய வேண்டும்.
முதலில் கடாயயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
எணணெய் சூடேறும் வரும் காத்திருங்கள்.
என்னை சூடேறியவுடன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், மல்லி இந்த ஐந்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் நாம்
வறுத்து எடுத்துள்ள பொருட்களை தனியாக ஒரு பவுலில் எடுத்து சூடு ஆறும் வரை காத்திருங்கள்.
சூடு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் ஒரு சில் தேங்காய் வெட்டி சேர்த்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
பின்பு குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து புளி கரைசலை ஊற்றி நம் சமையலுக்கு வைத்திருக்கும் காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
பின உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதை நன்றாக வேக வைக்கவும்
காய்கறிகள் வெந்து வரும்போது, துவரம் பருப்பு சேர்த்து நன்றாக மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாம்பார் பொடி சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அப்புறம் உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
எண்ணெய் சூடு ஏறியவுடன் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை,சிவப்பு மிளகாய்,பச்ச மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
பின் இந்த தாளிப்ப சாம்பாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் சாம்பாரை இறக்கி, சிறிது கொத்தமல்லியை தூவி விடுங்கள்.
அவ்வளவுதான் சாம்பார் இனிதே தயாராகி விட்டது.
No comments:
Post a Comment