நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் விதைகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, August 29, 2023

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் விதைகள்..!

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் விதைகள்..!
தாமரை விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முக்கியமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையை தாமரை விதைகள் குறைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. 

 நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது

 ரத்த ஓட்டத்தை சீராக்கவும், மண்ணீரலை சுத்தப்படுத்தவும், உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் சிறுநீரின் மூலம் வெளியேற்ற தாமரை விதைகள் உதவுகின்றன.

 ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

 மக்னீசியம், புரதம், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் தாமரை விதைகளில் நிறைந்துள்ளன. இந்த விதைகளில் சோடியம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

  நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

 தாமரை விதைகள் ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இவை குறைந்த கிளைசெமிக் குறியீடுகளைக் கொண்டுள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

 எலும்புகளை வலுவாக்கும் தாமரை

 விதைகள் கால்சியம் நிறைந்தது. கால்சியமானது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தாமரை விதைகளை பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 உடல் எடையை பராமரிக்க

 கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகள் தாமரை விதைகளில் குறைவாக இருப்பதால், உடல் எடையை பராமரிக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றது.

கருவுறுதலுக்கு நல்லது 

 பெண் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டை தாமரை விதைகள் உறுதி செய்கின்றன. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவது கருவுறுதலை மேம்படுவதாக கூறப்படுகிறது. 

 முதுமையைத் தடுக்கிறது

 தாமரை விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இது முதுமையை தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. தாமரை விதைகளில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையோடு அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு அளவோடு சாப்பிடலாம்.

No comments:

Post a Comment