ஆடி கிருத்திகை: உள்ளூர் விடுமுறை - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 5, 2023

ஆடி கிருத்திகை: உள்ளூர் விடுமுறை

ஆடி கிருத்திகை: உள்ளூர் விடுமுறை
ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். 

ஆடிக் கிருத்திகைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். 

உள்ளூர் மக்களும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டும், ஆயிரக்கணக்கில் திரளும் பக்தர்களின் பாதுகாப்பு வசதியைக் கருத்தில் கொண்டும், ஆகஸ்ட் 9ம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு அலுவலகங்களும் இயங்காது. அதே சமயம் முக்கிய அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் இயங்கும். 

 இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 26-ம் தேதி முழு பணிநாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment