ஓணம் பண்டிகை: உள்ளூர் விடுமுறை - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, August 9, 2023

ஓணம் பண்டிகை: உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை: உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். 

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2023, செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

 மேற்படி உள்ளூர் விடுமுறைக்குப் பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. 

 ஆயினும், உள்ளூர் விடுமுறை நாளான 29.08.2023, அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கரூவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment