நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வு:நுழைவுச்சீட்டு வெளியீடு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 31, 2023

நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வு:நுழைவுச்சீட்டு வெளியீடு

நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வு:நுழைவுச்சீட்டு வெளியீடு
நான் முதல்வன்' மதிப்பீட்டு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 `நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 7/3/2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

 அப்பிரிவானது தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

 இந்நிலையில் 2023-2024க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் 1000 மாணவர்களும் மதிப்பீடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு முதல் நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7500 ரூபாய் பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஊக்கத்தொகைக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 2/8/2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.8.2023ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டு தேர்வு 10.9.2011 நடைபெறும் நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு நேற்று (30.8.2023) வெளியிடப்பட்டுள்ளது. 

நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீடு தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment