வாட்ஸ்ஆப் அப்டேட் செய்தவர்களுக்கு இந்த வசதி வந்துவிட்டதா? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, August 18, 2023

வாட்ஸ்ஆப் அப்டேட் செய்தவர்களுக்கு இந்த வசதி வந்துவிட்டதா?

வாட்ஸ்ஆப் அப்டேட் செய்தவர்களுக்கு இந்த வசதி வந்துவிட்டதா?
அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ்ஆப். அதில், இதுவரை டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களை மட்டுமே அனுப்பி வந்தநிலையில், தற்போது சிறிய விடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதி வந்துவிட்டது.

 ஏற்கனவே, வாட்ஸ்ஆப்பில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அதே ஐகானை, சற்றுநேரம் கிளிக் செய்திருந்தால், அங்கே கேமரா ஐகான் வரும். அதனை வழக்கம் போல வாய்ஸ் மெசேஜ் போல பயன்படுத்தி யார் ஒருவரும் மிக எளிதாக ஒரு விடியோ மெசேஜ் அனுப்ப முடியும். நாம் பேசி அனுப்பும் விடியோ ஒரு வட்ட வடிவில், பெறுநர்களுக்குக் கிடைப்பது கூடுதல் அம்சமாகும். 

அதிகபட்சமாக 60 வினாடிகள் வரை ஒருவர் விடியோ மெசேஜ் அனுப்பலாம். யாரேனும் எங்கே இருக்கிறீர்கள் என்று டெக்ஸ்ட் செய்தால், உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு விடியோவை எடுத்து அனுப்பிவிடலாம். 

அவ்வளவுதான் வேலை முடிந்தது. வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது முதல் பல்வேறு அம்சங்களை அது இணைத்துக் கொண்டேதான் செல்கிறது. சிலது மக்களை அதிகம் பரவசத்தில் ஆழ்த்திவிடும். அதில் நிச்சயம் இந்த விடியோ மெசேஜ் ஆப்ஷன் இடம்பெறலாம் என்று நம்பப்படுகிறது.

 வாட்ஸ்ஆப் அப்டேட் செய்தவர்களுக்கு இந்த வசதி வந்துவிட்டது. அப்டேட் செய்யாமல் இருக்கும் வாட்ஸ்ஆப் பயனர்கள் அப்டேட் செய்து, விரைவில் இந்த வசதியைப் பெறலாம்.

No comments:

Post a Comment