ஃபோன் சார்ஜ் ஆகும் போது பின்னணியில் அதன் செயல்பாடுகள் தொடரும், அதனைக் கட்டுப்படுத்தி சார்ஜிங் வேகத்தை அதிகரிக்கலாம்.
பின்னணி ஆப் ரெப்ரெஷை டிஸேபிள் செய்யுங்கள்
செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று ஜெனரல் செட்டிங்கை கிளிக் செய்யுங்கள்.
இங்கே பேக்கிரவுண்ட் ஆப் ரெப்ரெஷ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை டிஸேபிள் செய்யுங்கள்.
இவ்வாறு செய்யும் போது நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் பின்னணியில் இயங்காது.
பேட்டரியின் எனர்ஜி பயன்படுத்தப்படாமல் இருக்கும். சார்ஜ் முழுமையாவதற்கான நேரமும் குறையும்
.உங்களுக்கு சில ஆப்கள் பயன்படுத்த வேண்டி இருந்தால் அதனை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்.
லோ பவர் மோடை பயன்படுத்துங்கள்
இந்த அம்சம் உங்கள் பேட்டரியை நீண்ட நேரம் நீடிக்கச் செய்யும் நோக்கத்திற்கானது. இருந்தாலும், உங்கள் ஐபோனில் வழக்கமாக பின்னணியில் செய்யப்படும் சில அத்தியாவசியமற்ற டாஸ்குகளை நிறுத்தும்.
இதன் மூலமும் உங்கள் ஐபோன் சற்று வேகமாக சார்ஜ் ஆகும். செட்டிங்ஸ் சென்று, அதில் பேட்டரி ஆப்ஷனை கிளிக் செய்தால் லோ பவர் மோட் இடம்பெற்றிருக்கும்.
ஏர்பிளேன் மோடில் போடலாம்
தொந்தரவுகளை சில மணி நேரங்கள் தவிர்க்க இருப்பது தான் ஏர்பிளேன் மோட். சிலர் இதனை இரவு தூங்கும் போதெல்லாம் கூட பயன்படுத்துவர்.
ஐபோன் முகப்புத் திரையில் கன்ட்ரோல் சென்டரில் விமான படம் போட்டிருக்கும். அதனை தட்டி ஏர்பிளேன் மோடை ஆக்டிவேட் செய்யுங்கள். இப்போது சார்ஜ் செய்யும் போது வேகமாக 100% எட்டும்.
No comments:
Post a Comment