அந்தவகையில், சருமம் ஆரோக்கியமாக பளபளப்பாக இருக்க வைட்டமின்கள் நிறைந்த பாதாம் எண்ணெய் முக்கியமான பொருள் என்று கூறலாம்.
குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன்னதாக சருமத்தில் பாதாம் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்துவிட்டு தூங்கினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாம் எண்ணெய் என்ன செய்யும்?
பாதாம் எண்ணெயில் பேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் இ இருப்பதால் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்.
ஆன்ட்டி- ஆக்சிடன்ட் நிறைந்தது, சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது,
சுருக்கத்தையும் குறைக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.
கரும்புள்ளிகளை அகற்றுகிறது.
சருமத்தில் நோய்த்தொற்றுகளை அல்லது அழற்சியை சரிசெய்து சருமத்தை மிருதுவாக்கும்.
கண்களின் கீழ் உள்ள கருவளையத்தை படிப்படியாகக் குறைக்கும். கண்களின் கீழ் உள்ள வீக்கங்களும் தீர்வாக இருக்கும்.
மேக்அப் ரிமூவராகவும் பயன்படுகிறது.
வடுக்கள், தழும்புகளையும் குறைக்கும்.
ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமிலங்கள் இருப்பதால் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும்.
இரவு தூங்குவதற்கு முன்பு தடவும்போது உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.
No comments:
Post a Comment