ஆனால் தற்போது இணையத்தில் ஃபிட்னஸ் குறு வீடியோக்கள் பலவற்றில் ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் வாக்கிங் பிரபலமாகி வருகிறது. அதென்ன ரிவர்ஸ் வாக்கிங், வாங்க பார்க்கலாம்.
ரிவர்ஸ் வாக்கிங் என்பது நீங்கள் நினைப்பதுபோல பின்னோக்கி நடந்து செல்லும் வாக்கிங் முறைதான். இவ்வாறு வாக்கிங் செய்வது பாப் நடனக் கலைஞர் மைக்கேல் ஜாக்ஸன் மூன் வாக் செய்வதுபோல இருக்குமா என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
ஆம்..! வேகமான மற்றும் உறுதியான ரிவர்ஸ் வாக்கிங் தூர இருந்து பார்ப்பவர்களுக்கு மூன் வாக் போலவே காட்சியளிக்கும்.
ரிவர்ஸ் வாக்கிங் செய்தால் தெருவில் நம்மை அனைவரும் ஒருமாதிரி பார்க்கமாட்டார்களா என நீங்கள் நினைப்பதும் சரிதான்..! ரிவர்ஸ் வாக்கிங்கில் இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் இதனால் ஏகப்பட்ட பலன்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.
ரிவர்ஸ் வாக்கிங் உங்களது குதிகால் எலும்பு மற்றும் நரம்புகளை வலுப்படுத்துகிறது. மேலும் உங்கள் குதிகால் தசைகளை ஃபிளெக்ஸிபிள் ஆக்குகிறது. மேலும் நேராக நடக்கும்போது நமது சமநிலையை அதிகரிக்க உதவுகிறது.
வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து படிப்படியாக மீள ரிவர்ஸ் வாக்கிங் பெரிதும் உதவுகிறது. உங்கள் வீட்டு மொட்டை மாடியில்கூட நீங்கள் ரிவர்ஸ் வாக்கிங் செய்யலாம்.
முன்னால் நடந்து செல்வதைக் காட்டிலும் பின்னோக்கி நடப்பது உங்கள் உடல் கலோரிகளை அதிகமாக எரிக்க உதவுகிறது. ஆனால் பின்னோக்கி வேகமாக நடக்க பயிற்சி தேவை. எனவே முதன்முதலாக ரிவர்ஸ் வாக் செய்பவர்கள் மிதவேகத்தில் நடப்பது நல்லது.
No comments:
Post a Comment