அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் துணைத்தேர்வு எழுதினர். இதில், மாநிலம் முழுவதும் 5229 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து இம்மாணவர்கள் உயர்கல்வி பயில வசதியாக அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ள பாடப்பிரிவுகளில் சேர்த்து விட அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்களும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விபரங்களை தெரிவித்து மாணவன் விருப்பம் தெரிவிக்கும் பாடப்பிரிவில் சேர்க்க விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment