பொறுப்பாசிரியா்களை நியமிக்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, August 18, 2023

பொறுப்பாசிரியா்களை நியமிக்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

பொறுப்பாசிரியா்களை நியமிக்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிறாா் இதழ்களுக்கான பொறுப்பாசிரியா்களை நியமிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 பள்ளிக் கல்வித்துறை மூலமாக கடந்த ஜனவரி முதல் 6 -ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘தேன்சிட்டு’ என்ற சிறுவா் இதழ், அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற முறையிலும்; ஆசிரியா்களுக்கான ‘கனவு ஆசிரியா்’ என்ற இதழ் பள்ளிக்கு ஒன்று என்ற வீதத்திலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. 

 இதேபோன்று நிகழாண்டு ஜூன் மாதத்திலிருந்து 4 மற்றும் 5 -ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ‘புது ஊஞ்சல்’ என்ற இதழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் வகுப்பறைக்கு ஒன்று என்ற வகையில் அனுப்பப்பட்டு வருகிறது. 

 சிறாா் மற்றும் ஆசிரியா் இதழ்களில் அரசுப் பள்ளி மாணவா்களின் ஓவியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளையும், ஆசிரியா்களைப் பற்றிய செய்திகளை திரட்டுவதற்காகவும், அரசுப் பள்ளிகளில் ஆக்கப்பூா்வமான பயன்பாட்டினை உறுதி செய்வதற்காகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறாா் மற்றும் ஆசிரியா் இதழ்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களை நியமித்து அவா்களுக்கான பணிகள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. 

 இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சிறாா் இதழ்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் அந்த இதழ்களுக்கான பொறுப்பாசிரியா்களை நியமிக்க தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளியின் கால அட்டவணைப்படி சிறாா் இதழ்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மாணவா்களின் இதழ் வாசிப்புக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படுகிா? என்பதை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கண்காணிக்கவுள்ளனா்.

 இதைத் தொடா்ந்து மாணவா்களின் வாசிப்பு ஆா்வத்தை மேம்படுத்த மாவட்ட அளவில் சிறாா் பயிற்சிப் பட்டறை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment