பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வபோது புதுப்புது அப்டேட்களை வழங்கி வரும் வாட்ஸ் அப் நிறுவனம், வார வாரம் ஒரு அப்டேட்டை அறிமுகப்படுத்தி வருகிறது. பயனர்களின் பாதுகாப்பு, மற்றும் தேவைக்கேற்ப தங்கு தடையில்லாமல் அப்டேட்களை கொடுத்து வருகிறது.
அந்தவரிசையில் தற்போது, வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மல்டி-அக்கவுன்ட் அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையை துவங்கியுள்ளது.
இந்த மல்டி அக்கவுன்ட் மூலம், பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் பல்வேறு அக்கவுன்ட்கள் இடையே ஸ்விட்ச் செய்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.
இதற்காக மூன்றாம் தரப்பு ஆப்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்சம் பற்றி வாட்ஸ் அப் குறித்த தகவல்கள் வெளியிடும் Wabetainfo வெளியிட்டு உள்ளது.
முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 போன்ற வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுன்ட் அம்சத்தை தங்களது வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள கியூ.ஆர். கோடுக்கு (QR code) அருகில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
உங்களுக்கு இந்த மல்டி அக்கவுன்ட் அம்சம் வழங்கப்பட்டு இருந்தால், மற்றொரு அக்கவுன்டை சேர்க்க முடியும்.
அதன்பின் அந்த அக்கவுன்ட்-ன் மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து அந்த அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment