மிகவும் பயனுள்ள 9 சமையல் அறை டிப்ஸ் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, August 12, 2023

மிகவும் பயனுள்ள 9 சமையல் அறை டிப்ஸ்

மிகவும் பயனுள்ள 9 சமையல் அறை டிப்ஸ்
1.லட்டு செய்யும் போது அந்த கலவையில் ஏதாவது பழ எசன்ஸை கலந்து லட்டு செய்தால் சுவையும், மணமும் அனைவரையும் கவரும். 

 2.சோமாஸ் செய்யும் போது உள்ளே வைக்கும் பூரணம் உதிர்ந்து விடாமல் இருக்க பூரணத்தில் சிறிதளவு நெய்விட்டு கலந்து விட்டால் உதிராது.

 3.இனிப்பு வகைகளுக்கு கலர் சேர்த்து செய்யும்போது, அந்த கலரை ஒரு ஸ்பூன் வென்னீரில் கரைத்து கலந்தால் கலர் எல்லா இடங்களிலும் நன்றாக கலந்து கொள்ளும். 

 4.காலையில் வைத்த சாம்பாரை மீண்டும் மாலையில் இட்லி, தோசை போன்ற டிபனுக்குத் தொட்டுக் கொள்ள பயன்படுத்தும் பொழுது சிறிது வெந்தயத்தையும் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் ஹோட்டல் சாம்பார் போல நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

 5.பால் முறிந்து விட்டால், முறிந்த பால் ஆறிய பின் மிக்ஸியிலிட்டு ஓட்டுங்கள். பிறகு உறை வையுங்கள். பால் நன்கு உறைந்து கெட்டியான தயிராகிடும். 

 6.சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போல் தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணையைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

 7.கீரையுடன் பயத்தம் பருப்புக் கூட்டு செய்யும் போது ஒரு கப் பாலை அதில் விட்டால் மணமாக இருக்கும்.

 8.பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்து விட்டால் பழுத்து விடாமல் பசுமையாகவே இருக்கும்.

 9.வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும் மிளகுப் பொடியும் கலந்தால், அது சுவையுடன் இருக்கும்.

No comments:

Post a Comment