பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தகுதி
21.8.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
மாதம் ரூ.41,960
வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி, 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.850.
இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரா்கள் https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலைத் தேர்வு மையங்கள்:
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை
https://www.ibps.in
அல்லது கீழே உள்ள link ஐ கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
https://www.tamilanguide.in/wp-content/uploads/2023/07/IBPS-PO-MT-Official-Notification-PDF.pdf
No comments:
Post a Comment