இன்று (28-08-2023) சோமவார பிரதோஷம்: இதன் மகிமை, புராணக் கதை,வழிபடும் முறை, மந்திரங்கள் மற்றும் உண்டாகும் பலன்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, August 28, 2023

இன்று (28-08-2023) சோமவார பிரதோஷம்: இதன் மகிமை, புராணக் கதை,வழிபடும் முறை, மந்திரங்கள் மற்றும் உண்டாகும் பலன்கள்

இன்று (28-08-2023) சோமவார பிரதோஷம்: இதன் மகிமை, புராணக் கதை,வழிபடும் முறை, மந்திரங்கள் மற்றும் உண்டாகும் பலன்கள்
ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதோஷம் இன்று திங்கட்கிழமை (28-08-2023) சிறப்பாக வருவதால் இதனை சோமவார பிரதோஷம் என்கிறோம்.

 சோமன் என்பது சந்திரனையும், சிவனையும் குறிக்கக் கூடிய சொல் ஆகும். திங்களை முடி மேல் சூடிய சிவனை வழிபட சோமவாரம் மிகச் சிறப்பான நாளாகும். பிரதோஷ காலங்களில் சிவனையும், நந்தியையும் தரிசிப்பதால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி, புண்ணிய பலன்கள் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு இணையான புகழும் செல்வாக்கும் அளிக்கும்.

 சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதம், மிக அற்புதமான பலனை தரக்கூடியதாகும். அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் சக்தி படைத்தது பிரதோஷ வழிபாடு. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்வது அளவில்லாத பல மடங்கு பலன்களை தரக்கூடியதாகும். 

 பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு என்றும், பிரதோஷ நாட்களில் கடைபிடிக்கும் விரதத்தினை பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த பிரதோஷத்துக்கான புராண கதை என்னவென்றால் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் கைகளால் சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். பார்வதி தேவி தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமான் ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனளிக்கும்.

 மாதந்தோறும் இருமுறை – அதாவது வளர் பிறை மற்றும் தேய் பிறை திரயோதசி (13-ம் நாள்) பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது அனைவரது நம்பிக்கை.

 சோமவார பிரதோஷ மகிமை

 சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான். 

நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம். நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம். ஆகவே, மனகிலேசத்துடன், மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை. 

சோமவாரப்பிரதோசம் மனக்குழப்பத்தை தீர்க்கும்.

தோஷம் நீக்கும் சோமவார பிரதோஷம்

 இன்று (திங்கள் கிழமை) திரயோதசி நாளில் நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். 

ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். 

தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும். போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும். 

 சிவனுக்கு அபிஷேம் 

பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். 

பாலபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிரபிஷேகத்தினால் வளங்கள் பல உண்டாகும், தேனபிஷேகம் இனிய குரலும், பழங்களால் அபிஷேகம் செய்தால் நிலத்தில் விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் அபிஷேகத்தினால் செல்வம் பெருகும். 

 சக்தி தரும் அபிஷேகம்

 நந்திக்கு நெய் அபிஷேகம் செய்தால் முக்தி பேறு கிட்டும். இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை அபிஷேகத்தினால் எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் அபிஷேகம் செய்தால் சுகவாழ்வு கிடைக்கும். சந்தன அபிஷேகம் செய்வதன் மூலம் சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் அபிஷேகம் செய்வதனால் தெய்வ தரிசனம் கிட்டும்.

 பக்தர்களுக்கு பிரசாதம்

 பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய் பயம் விலகும். ஒரு கைப்பிடி காப்பரிசி,ஒரு பிடி வில்வ இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை சிவனுக்கு கொடுத்து விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வணங்க சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

 சோமவார பிரதோச நாளில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

 சிவன் வசிய மந்திரம்

 இத்தனை சிறப்பு நிறைந்த பிரதோஷ நாளில் ஈசனை தியானித்து கீழ்க்கண்ட இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

 சிவபெருமான் நமக்கு வசியமாவார். 

 ஓம் தெங்கிலி வா செயங்கொள்ளப் பிரபஞ்சம் வா வா … 

 ஐயும் ஸ்ரீரிங் காமனையும் தான்வென்ற ஈஸ்வரா வா வா.. 

 என்று 108 முறை மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பிரதோஷ காலம் மட்டும் என்று இல்லாமல் அனைத்து நாட்களிலும் தொடர்ந்து இவ்வாறு கூறிவர வேண்டும்.

 அதிகாலை அல்லது அந்தி மாலையில் யாரும் தொந்தரவு தராத தனிமையான இடத்தில், அருகில் ஒரு அகல் விளக்கில் நெய் தீபமேற்றி நிறைவேற வேண்டிய வேண்டுதலை மனதில் சங்கல்பமாக வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சரியான முறையில் உச்சரித்து வந்தோம் என்றால் எந்த செயலில் வெற்றிபெற நினைக்கிறாயோ அந்த செயலுக்கு சிவன் வசியமாகி உடனிருந்து அருள் புரிவார். காரியசித்தி உண்டாகும்.

No comments:

Post a Comment