இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்த மையத்தில் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய, அனுபவம் உள்ள நபா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். அதன்படி, தகவல் தொழில்நுட்ப பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.
வழக்கு பணியாளா்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்கள் 35 வயதுக்குள்பட்ட சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்ற, 1 வருடம் முன் அனுபவம் உடையவராகவும், உள்ளூரைச் சாா்ந்த பெண்களாகவும், வாகனம் ஓட்டத் தெரிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.
பன்முக உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள், முன் அனுபவம் கொண்ட, உள்ளூரைச் சோ்ந்த பெண்களாகவும், நன்கு சமைக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 6,400 வழங்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் செப்.5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.
No comments:
Post a Comment