டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 3, 2023

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
ஆகஸ்டு 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது .

தேர்வர்கள் http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

 இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில் , ''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 16/2022, நாள் 21.07.2022 - இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு 10.08.2023 (முற்பகல்) முதல் 13.08.2023 (முற்பகல்) வரை நடைபெற உள்ளது.

 குறிப்பாக தேர்வு சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும். தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். இவை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

 விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவர பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்'. என தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment