இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்கள், தோ்வு எழுதாதவா்கள் உயா்கல்வியை தொடர வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, இத்தகைய மாணவா்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்காக ஐடிஐ -க்கு செல்லும் போது 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டுமென கேட்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாணவா்கள் சேருவதற்கு ஏதுவாக தேவையுள்ளவா்களுக்கு எட்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்கி தொழிற்கல்வியில் சேர சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment