தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியா்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. 2020 மாா்ச் இறுதியில் கரோனா தொற்று தொடங்கியதால், பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் கரோனா பரவும் என்பதால், பயே மெட்ரிக் முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் 11.7.2023 அன்று பள்ளிக் கல்வித் துறை, அனைத்து வகை கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மூன்றரை வருடங்களுக்கு முன்னா் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் எத்தனை? அதில் எத்தனை இயங்குகின்றன? எத்தனை இயங்கவில்லை? என்ற விவரத்தை அவசரமாகக் கேட்டுள்ளது.
கேட்ட சில மணி நேரங்களிலேயே , பயோ மெட்ரிக் இயந்திரங்களை அந்தந்தக் கல்வி அலுவலா்கள் பெற்று மாவட்ட அலுவலகங்களில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்களில் கேட்ட போது, தமிழகம் முழுவதும் கரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டதால் தற்போது பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு பயோ மெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியா்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை சென்னையில் இருந்தபடி கண்காணிக்கலாம் என்றனா்.
No comments:
Post a Comment