சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் நெல்லிக்காய் - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 29, 2023

சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் நெல்லிக்காய்

சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் நெல்லிக்காய்
நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். 

உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும்.

 இதயத்துக்கும் நல்லது.

 நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும். இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்னைகள் வராமல் தடுப்பவை. 

 பெரிய நெல்லி சாப்பிட்டால் சளி பிடிக்குமா? 

பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

 உண்மையில் இதில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பில் இருக்கிற கபத்தை வெளியேற்றும், அதைத்தான் நாம் சளி பிடித்துக்கொண்டதாக நினைக்கிறோம். 

ஆனால், இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு ஏற்படும்.

 குழந்தைகளுக்கு பெரிய நெல்லிக்காயை எப்படிக் கொடுக்கலாம்? 

குழந்தைகளுடைய வாட்டர் பாட்டிலில் ஒரு நெல்லிக்காயை கட் பண்ணிப் போட்டு, அதில் தண்ணீரை ஊற்றி விடலாம். நெல்லிக்காய் ஊறிய இந்தத் தண்ணீரைக் குடித்தாலே குழந்தைகளுக்குப் போதுமான வைட்டமின் `சி' கிடைத்துவிடும்.

 ஆனால், குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 

 இதில் கவனமாக இருங்கள்! 

நெல்லிக்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் என்பதால், இந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், ஓர் இயற்கை மருத்துவரிடம் தினசரி எத்தனை நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிடலாம். 

 இப்படியும் சாப்பிடலாம்?

 பெரிய நெல்லிக்காயையோ, அதன் சாற்றையோ நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், நெல்லிக்காயுடன் வறுத்த உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துத் துவையலாகச் சாப்பிடலாம்.

 நெல்லிக்காய்... யாருக்கு, எத்தனை?

 வைட்டமின் `சி' நாளொன்றுக்கு, ஒன்று முதல் 3 வயதுக் குழந்தைகளுக்கு 15 மில்லி கிராமும், 4 - 13 குழந்தைகளுக்கு 25 - 45 மில்லிகிராம் வரையிலும், வளர்ந்தவர்களுக்கு 90 மில்லி கிராம் வரையிலும் போதுமானது. 

 ஆனால், 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் `சி' இருக்கிறது. 

பெரிய நெல்லிக்காயை அழுத்தினால் ஆறு கீற்றுகளாக வரும். பெரியவர்கள் அதில் இரண்டு கீற்றுகளை மட்டும் தினசரி சாப்பிட்டால் போதும். 

சாறாகக் குடிக்கிறீர்கள் என்றால், அரை நெல்லிக்காய் போதும். குழந்தைகளுக்குத் தினமும் ஒரு கீற்று போதும்.

 அதிகமாகச் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் வருமா? 

வைட்டமின் `சி' நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால், அதிகப்படியானதை உடம்பால் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. 

தேவையானதை எடுத்துக்கொண்டு மீதத்தை உடல் வெளியேற்றிவிடும்.

 நெல்லிக்காய் அதிகமாகச் சாப்பிட்டால், ஒரு சிலருக்கு வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். 

மற்றபடி பெரிதாக வேறு எந்தப் பிரச்னையும் வராது.

No comments:

Post a Comment