இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையான சௌசௌ சட்னி செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 6, 2023

இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையான சௌசௌ சட்னி செய்வது எப்படி?

இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையான சௌசௌ சட்னி செய்வது எப்படி?
சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது. 

இனி சுவையான சௌசௌ சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 தேவையான பொருட்கள் 

சௌசௌ (பெங்களுரு கத்தரிக்காய்) – 1 எண்ணம் (¼ கிலோ கிராம்) 

 மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது) 

 புளி – சின்ன எலுமிச்சை அளவு இஞ்சி – சுண்டு விரல் அளவு

  வெள்ளைப் பூண்டு – 2 எண்ணம் (மீடியம் சைஸ்) 

 கல் உப்பு – தேவையான அளவு 

 தாளிக்க 

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன் 

 உளுந்தம் பருப்பு – 5 ஸ்பூன் 

 சின்ன வெங்காயம் – 2 எண்ணம் 

 கடுகு – ¼ ஸ்பூன் 

 கறிவேப்பிலை – 3 கீற்று

  செய்முறை 

முதலில் சௌ சௌவை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின் அதனைச் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். 

 மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.

 இஞ்சியைத் தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

 கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றவும்.

 பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், உளுந்தம் பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல், வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும். உளுந்தம் பருப்பு சிவந்து கடுகு வெடித்ததும் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய சௌ சௌ துண்டுகளைச் சேர்க்கவும். 

 ஒரு நிமிடம் கழித்து அதனுடன் சதுரங்களாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளைச் சேர்க்கவும். சௌ சௌ கலவை அரை பாகம் வெந்தவுடன் புளியைச் சேர்த்து வதக்கவும். 


 பின் ஓரிரு நிமிடங்களில் சௌ சௌ கலவையை இறக்கி விடவும். இதனை நன்கு ஆற விடவும். ஆற கலவையுடன் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சுவையான சௌசௌ சட்னி தயார்.

 இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இந்த சட்னி தயார் செய்ய இளம் சௌ சௌவை தேர்வு செய்யவும். சௌ சௌ கலவையை அதிக நேரம் அடுப்பில் வைத்து வேக விட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

No comments:

Post a Comment