இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.
இந்த உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது.
உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment