சிறுநீரகங்களில் உள்ள நெப்ரான் என்னும் வடிக்கட்டிகள், ஒருநாளைக்கு 30 முதல் 50 முறை ரத்தத்தை சுத்தம் செய்கின்றன.
சிறுநீரகங்களை ஆரோக்கியமான வைத்திருக்க உதவும் காய்கறிகள், பழங்கள்
சிவப்பு திராட்சை :
சிவப்பு திராட்சையில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பதால், வீக்கத்தை குறைப்பதுடன், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்க உதவுகிறது.
முட்டைக்கோஸ் :
முட்டைக்கோஸில் பைட்டோ கெமிக்கல் நிரம்பியுள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீரேடிக்கல்களை உடைக்க உதவுகிறது.
ஆல்கஹால் நச்சுக்களை அகற்ற உதவுவதால், சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
சிவப்பு குடைமிளகாய் :
சிவப்பு குடை மிளகாயில், பொட்டாசியம், லைகோபின், ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் இருப்பதால், புற்றுநோக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.
பெரிய வெங்காயம் :
வெங்காயத்தில் இயற்கையாக உள்ள புரோஸ்டாக்லாண்டின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
மேலும், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
குருதிநெல்லி :
குருதிநெல்லியில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் பாலிபினாலை அளிக்கிறது.
மேலும் இதில் ஒரு மில்லி கிராம் சோடியம் உள்ளது.
பூசணி விதைகள் :
பூசணி விதையில் வைட்டமின் - இ அதிகளவில் உள்ளது.
நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகமல் தடுப்பதோடு, வெளிப்புற சேதத்தில் இருந்து காக்க உதவுகிறது.
செர்ரி பழங்கள் :
செர்ரி பழங்களில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் - சி நிறைந்துள்ளது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
எலுமிச்சை :
எலுமிச்சை சாறில் சிட்ரேட் உள்ளது. இது கால்சியம் உருவாகாமல் தடுக்கிறது.
இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கிறது.
முள்ளங்கி :
முள்ளங்கியில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது.
மேலும் வைட்டமின் - சி, ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் இருப்பதால், சிறுநீரகங்களை பாதுகாப்பதில் உதவிபுரிகிறது.
No comments:
Post a Comment