ரசம் நாக்கிற்கு ருசியை மட்டும் அளிப்பதில்லை, நம் உள்ளுறுப்புகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
நட்சத்திர ஓட்டல்களில் சாப்பாட்டுக்கு முன்பு சூப் வழங்குகின்றனர்.
சூப் என்றவுடன் அதற்கு மாடர்ன் தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. அதனை சில நூறு ரூபாய் தந்து வாங்கிப் பருகின்றனர். தென்னிந்திய சூப் எனப்படும் ரசத்தை வீட்டிலேயே தயாரிப்பதாலோ என்னமோ அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.
விஷேச நிகழ்ச்சிகளில் சாப்பிடுவதோடு சரி. ஆனால் தினமும் நீங்கள் சாதத்துடன் ரசம் ஊற்றிச் சாப்பிடுவதால் உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரசத்தில் சேர்க்கப்படும் மேற்கூறியப் பொருட்களால் செரிமானம் விரைவாக நடக்கிறது. இது நாம் பலரும் அறிந்ததே.
இவை மட்டுமின்றி ரசத்தில் வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி3, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் , செலினியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் உள்ளது. மழைக் காலங்களில் இவை நிச்சயம் உங்கள் சாப்பாட்டு மேஜை மீது இருக்க வேண்டும்.
ரசத்தின் பெருமைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதாவது:
ரசத்தில் புளி உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வயிற்று உப்புசம் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சினைகளை போக்கும். மஞ்சள், சீரகம், மிளகு உள்ளிட்ட மசாலா மற்றும் மூலிகைப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
. திரவ அடிப்படையிலான உணவாக இருப்பதால், ரசம் உங்களை ஹைட்ரேட்டட் ஆக அதாவது உடல் திரவ நிலையை சமநிலை செய்யும். ரசத்தின் கலோரி ஒப்பீட்டளவில் குறைவு. தொப்பையை வைத்துக் கொண்டு தள்ளாடுபவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment