நித்திய மல்லி
நித்தியமல்லி பல வகையான பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. ஸ்டார் ஜாஸ்மின் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மிக வேகமாக வளரும் இதன் கொடி மிகுந்த வாசனையுள்ள மலர்களை வாரி வழங்கும். இதனை வீட்டின் முகப்பில் ஏற்றினால், நுழையும் போதே நல்ல ஒரு மணம் கமழும். இது அதிகம் பராமரிப்பைக் கோராது.
இச்செடியில் வேரழுகல் நோய் வராமலிருக்க அடிக்கடி அதற்கு சிட்ரஸ் நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தோல் அல்லது எலுமிச்சை பழ தோல் போன்றவற்றை வெயிலில் நன்கு காய வைத்து கொஞ்சமாக வேரில் தூவி விடலாம்.
ரங்கூன் மல்லி
ரங்கூன் மல்லி அல்லது பர்மா மல்லி எனும் இந்த கொடி 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் மலர்கள் இளஞ்சிவப்பு வண்ணத்தில் நீள்வட்ட இதழ்களுடன் இருக்கும். உதிரும் போது சிவப்பு நிறமாக மாறிவிடும். வண்ணமயமான இந்த கொடியும் வீட்டில் வளர்க்க ஏற்றது.
கர்டைன் கொடி
இது ஒரு பிரபலமான தாவரம். வீடுகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் இதனை அழகிற்காக வளர்க்கிறார்கள். இது பசுமையான திரையை உருவாக்கும். இதற்கு பராமரிப்பு பெரிதாக தேவையில்லை.
காகிதப் பூ
போகன்வில்லா அல்லது காகிதப் பூ இளஞ்சிவப்பு, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள் என பல வண்ணங்களில் கிடைக்கும். இதனை மதில் சுவர் ஓரம் நட்டால் வீடே வண்ணம் பூத்துக் குலுங்கும்.
மணி பிளான்ட்
இதுவும் பிரபலமான உள்ளரங்க செடி. எளிதில் வளரும். இதனை வீட்டு ஜன்னல்களில் கண்ணாடி குடுவையில் தண்ணீர் ஊற்றி வளர்க்கலாம். தொட்டிச் செடியாக தொங்கவிடலாம். இவை அனைத்தும் உங்கள் வீட்டிற்கு அழகுச் சேர்க்கும்.
No comments:
Post a Comment