பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேருவதற்கு தகுதி என்ன?பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 6, 2023

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேருவதற்கு தகுதி என்ன?பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேருவதற்கு தகுதி என்ன?பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப்படிப்புடன் நெட், ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி அல்லது ஆராய்ச்சி படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்நிலையில், உதவி பேராசிரியர் பணிக்கு நெட், ஸ்லெட் தகுதித் தேர்வை மட்டும் தகுதியாக கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து வந்த இந்த கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறையை கொண்டு வந்து இருக்கிறது.

 இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், ‘‘கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியாக முதுநிலை பட்டப்படிப்புடன் நெட், ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 

இதன் அடிப்படையில் உதவி பேராசிரியர்களை நியமித்து கொள்ளலாம். இந்த விதிமுறை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் நெட், ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே முதுநிலை பட்டதாரிகள் உதவி பேராசியராக பணியில் சேரமுடியும். ஆராய்ச்சி படிப்பு முடித்து இருந்தால் அது அவர்களுக்கு கூடுதல் தகுதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment