வீட்டிலேயே சுவையான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 27, 2023

வீட்டிலேயே சுவையான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?

வீட்டிலேயே சுவையான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?
கோபி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:

 காளிபிளார் – 1/2 கிலோ 

 அரிசி மாவு – 5 டீஸ்பூன்

 கார்ன் மாவு – 4 டீஸ்பூன்

 மிளகுப்பொடி – 1/2 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் 

 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் 

 உப்பு – தேவையான அளவு 

 வெங்காயம் – தேவையான அளவு

 குடை மிளகாய் – சிறிதளவு 

 தக்காளி சாஸ் – 4 டீஸ்பூன் 

 சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

 சிவப்பு மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்

 கோபி மஞ்சூரியன் செய்முறை: 

 முதலில் காளிபிளார் குக்கரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்துக்கொள்ளவும். 

 பிறகு ஒரு கின்னத்தில் அரிசிமாவு, கார்ன்பிளார், மிளகாய்த்தூள், மிளகுப்பொடி ,இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும். 

 பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த காளிபிளார் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். 

 பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம், குடைமிளகாய், சோயா சாஸ் , தக்காளி சாஸ் மற்றும் சிவப்பு மிளகாய் சாஸ் சேர்த்து கிரேவி ஆகும் வரை மிதமான தீயில் வைக்கவும். 

 பிறகு அதில் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள காளி பிளார் போட்டு உப்பு சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

No comments:

Post a Comment