சுவையான வடகறி செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 8, 2023

சுவையான வடகறி செய்வது எப்படி?

சுவையான வடகறி செய்வது எப்படி?
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள வகை வகையாய் சட்னி, சாம்பார் வைத்தாலும், வடகறி இருந்தால் அந்த உணவே விருந்து தான்.

 அரைமணி நேரத்தில் சுவையான வடகறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள் : 

 கடலைப் பருப்பு - ஒரு கப் 

 வெங்காயம் - 2 

 பச்சை மிளகாய் - 3

 தக்காளி - 2

 சோம்பு - 1 ஸ்பூன்

 பட்டை, லவங்கம், கிராம்பு - தலா 1

 எண்ணெய் - 2 ஸ்பூன்

 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 இஞ்சி 

பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

 கொத்தமல்லி - சிறிதளவு

 முந்திரி - 10 

 மஞ்சள் - 1/4 ஸ்பூன்

 தனியா தூள் - 1/2 ஸ்பூன்

 கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

 தேங்காய் - அரை கப் 

 உப்பு - தேவையான அளவு 

 செய்முறை :

 கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

 இட்லி தட்டில் துணி பரப்பி அதன் மேல் அரைத்த மாவை கொட்டி 15 நிமிடங்கள் வேக வைத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.

 தேங்காயுடன் முந்திரி, சோம்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

 வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , இலவங்கம், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

 அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

 குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறவும். அடுத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும். 

 ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இப்போது சூப்பரான வடகறி தயார்..

No comments:

Post a Comment