தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகள் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, July 18, 2023

தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகள்

தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகள்
தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை, பள்ளி கல்வித் துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.

 அதன் விபரம்:

 தமிழகத்தில், 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும். அவற்றில் மாற்றுத் திறனாளி, சமூக பாதுகாப்பு துறை, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு, தலா, 2; மெட்ரிக் பள்ளிகளுக்கு மாவட்டத்துக்கு தலா ஒரு விருது வழங்கப்படும்.

 மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில், ஆறு உறுப்பினர்கள் குழு அமைக்கப்படும்.

 விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெறாமல் விடுபட்டு விடக் கூடாது.

 அடுத்த மாதம், 14க்குள் பரிந்துரை பட்டியல் தயார் செய்ய வேண்டும். அதிலிருந்து, மாநில தேர்வுக் குழு இறுதி பட்டியல் தயாரித்து, அரசுக்கு வழங்கும். 

 விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் மாநில பாடத்திட்ட ஆசிரியர்கள் மட்டுமே விருதுக்கு தகுதியானவர்கள் வகுப்பறை கற்பித்தல் பணி இல்லாத நிர்வாக பணி ஆசிரியர்களுக்கு விருது கிடையாது செப்., 30க்குள் ஓய்வு பெறும் ஆசிரியர்களை பரிந்துரைக்கக் கூடாது 

 குற்றச்சாட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், அவர் களுக்கு விருது கிடையாது அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படாது.

  கல்வியை வணிக ரீதியாக கருதி, 'டியூஷன்' எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் நடத்தை விதிகளுக்கு முரணாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கும் விருது கிடையாது

 ஏற்கனவே மாநில அரசு பரிந்துரைத்து, தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, இந்த விருது கிடைக்காது. இவ்வாறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment