பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 30, 2023

பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

 போதுமான அளவு தண்ணீர் குடித்தால், நமது உடல் சீராக இயங்கும். நீரிழப்பு மற்றும் பல தொற்று நோய்களைத் தடுக்கலாம். உடல் வெப்பநிலையை சீராக்கவும், செரிமான அமைப்பை சீரமைக்கவும், உடல் எடையை குறைக்கவும், உடல் புத்துணர்ச்சி பெறவும், சிறுநீரக பாதிப்பை தடுக்கவும் தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும். 

 ஆனால், எப்போது தண்ணீர் அருந்துவது என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

 அதேசமயம், காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால், தீங்கு விளைவிக்கும் கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதாகவும் கூறப்பட்டு வந்தது. பலருக்கும் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதுதான் நம்பிக்கையாக உள்ளது. காரணம் காலையில் நம் வாய் துர்நாற்றம் வீசும். குறிப்பாக காலையில் எச்சிலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருக்கும் என்பார்கள். ஆனால் இது வெறும் கட்டுக்கதை. இதை நிரூபிக்கும் அறிவியல் பூர்வமான உண்மைகள் இல்லை.

 உண்மையில் காலையில் வாயில் சுரக்கும் எச்சிலில் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது. எனவே காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் தண்ணீருடன் அந்த எச்சில் வயிற்றுக்குள் சென்று கெட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடும். எனவே நீங்கள் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் நன்மையே தவிர ஆபத்து இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

 பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் : 

 நாம் தூங்கும் போது வாயில் பாக்டீரியாக்கள் வளரும். பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கும்போது, ​​நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் இந்த பாக்டீரியாக்களைத் தான் நாம் உட்கொள்கிறோமாம்.

 எனவே, இந்த பாக்டீயாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது என்கிறார்கள். மேலும், இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை அதிகரிக்கவும் அஜீரண பிரச்னையை தடுக்கிறது என்றும் இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும் எனவும் கூறப்படுகிறது.

 தினமும் காலை தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் நோய் கிருமிகள், நோய் தொற்றுகளிலிருந்து போராட உதவுகிறது. 

 நீங்கள் காலை எழுந்ததும் 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க உடனே சிறுநீர் கழிக்க தோன்றும். இதனால் உங்களின் குடல் சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. 

 நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது செரிமானம் வேகமாக நடக்கும். அதேசமயம் வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கும். அதோடு நாள் முழுவதும் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

 தலைவலி, ஒற்றை தலைவலி பிரச்சனை இருப்பின் அதை குறைக்க உதவும். பெருங்குடல் தொற்று இருப்பின் அதை சீராக்கும். காரணம் உங்கள் குடல் சுத்தம் செய்யப்பட்டு சீராக இயங்கும்போது பெருங்குடல் வேலையும் எளிதாகிவிடும்.

 நீங்கள் தினமும் காலை தண்ணீர் குடிக்க மிதமான அளவில் உங்கள் உடல் எடை குறைவதை கவனிக்கலாம். வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, செரிமானம் சீராக இயங்கும்போது உடல் எடை குறைவதும் தானாக நிகழும். 

  உங்கள் சருமத்தை எப்போதும் ஃபிரெஷாக வைத்துக்கொள்ள உதவும். உடலின் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, சரும செல்களுக்கு தேவையான நீர் சரியான நேரத்தில் கிடைப்பதால் சருமம் எப்போதும் புத்துணர்வு பெற்றிருக்கும். 

உடல் நீரேற்றமும் சீராக இருக்கும் என்பதால் சருமப் பொலிவிழப்பு என்கிற பேச்சுக்கே இடமிருக்காது. 

 எனினும் ஒரு சில உடல்நிலை மற்றும் ஒவ்வாமைகள் காரணமாக, மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு பல் துலக்காமல் தண்ணீர் பருகுவது நல்லது.

No comments:

Post a Comment